சிறைக்கு பின்னால் சித்ரா – 7 நாள் காவலில் விசாரிக்க முடிவு..!!
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிர்வாக தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோ- லொகேஷன் எனப்படும் கணிணிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் சர்வர் கட்டமைப்பு வெளியாட்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கில் NSE-யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சித்ராவை நீதிபதி சஞ்சீவ் அகர்வால் முன் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, முறைகேடுகள் தொடர்பாக சித்ராவிடம் மேலும் இன்னும் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று கூறிய சிபிஐ, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, சித்ராவை ஏழு நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள சித்ரா ராமகிருஷ்ணா சிறையில் பகவத் கீதை படித்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.