NSC முறைகேடும், சித்ராவும்.. – இறுகும் CBI பிடி..!!
தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில், முன்னாள் நிர்வாக தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
NSC முறைகேடும், சித்ராவும்:
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த சாமியாரின் உத்தரவின்பேரில், சித்ரா ராமகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆனந்த் சுப்ரமணியனை 2013-ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் NSE-யின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தார். படிப்படியாக ஆனந்த் சுப்ரமணியத்தின் ஊதியம் அதிகரிக்கப்பட்டு, 2015-ம் ஆண்டில் 5 கோடியை எட்டியது. அத்துடன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சலுகைகளும், வசதிகளும் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு தரப்பட்டன. இதில் முறைகேடுகள் நடந்ததாக செபி தெரிவித்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், ஏற்கனவே ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.
CBI பிடியில் சித்ரா ராமகிருஷ்ணா:
இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தை தொடர்பாக விவரங்களை முன்கூட்டியே முகவர்களுறுக்கு கசிய விட்டதாகவும், தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில். சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர். முன் ஜாமீன் கேட்டு சித்ரா தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா முன்னுக்குப் பின் முரணாக பதில்களை தந்துள்ளதாகவும், இதனால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.