22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

Nvidia – இந்தியாவின் மொத்த பங்கு சந்தை மதிப்பீட்டையும் கடந்து செல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது

உலகின் முன்னணி சிப் நிறுவனமான Nvidia , செயற்கை நுண்ணறிவு (AI) சிப் ஆதிக்கத்தைத் தொடர்ந்து வேகமாக உயர்ந்து, இந்தியாவின் மொத்த பங்கு சந்தை மதிப்பீட்டையும் கடந்து செல்லக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது $4.3 டிரில்லியன் மதிப்பைக் கொண்ட Nvidia, கேன்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் (Cantor Fitzgerald) நிறுவனம் நிர்ணயித்துள்ள புதிய இலக்கு விலை $240 எட்டினால், இந்தியாவின் ரூ.5.21 டிரில்லியன் பங்கு சந்தை மதிப்பை மிஞ்சும்.


Nvidia கடந்த 16 மாதங்களில் தனது மதிப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. 2022 அக்டோபர் முதல் இதன் பங்கு விலை 1,400% உயர்ந்துள்ளது.

தற்போது, அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய பங்கு சந்தையான ஜப்பான் நிக்கெய் 225 குறியீட்டின் மதிப்பை விட வெறும் $1 டிரில்லியன் குறைவாகவே உள்ளது.

மேலும், எம்.எஸ்.சி.ஐ. உலகளாவிய குறியீட்டில் நிவிடியாவின் பங்கு 4.94% ஆக உள்ளது; இது ஜப்பானின் 4.97% பங்குக்கு நெருங்கியது.


ஆகஸ்ட் 18 அன்று Cantor Fitzgerald தனது இலக்கு விலையை $200 இலிருந்து $240 ஆக உயர்த்தியது. யூ.பி.எஸ், மோர்கன் ஸ்டான்லி, கீபேங்க், வெட்பஷ் போன்ற பல ப்ரோக்கரேஜ் நிறுவனங்களும் இலக்கு விலையை உயர்த்தியுள்ளன.

தற்போது, நிவிடியாவைப் பற்றிய ஆய்வாளர்களில் 90% பேர் “Buy” பரிந்துரையையே வழங்கியுள்ளனர்.
2025 ஆகஸ்ட் 27 அன்று நிவிடியா தனது Q2 முடிவுகளை அறிவிக்க உள்ளது.

வருவாய் $46 பில்லியனைத் தாண்டும், பங்கு ஒன்றுக்கு $1.01 லாபம் (கடந்த ஆண்டு விட 48% அதிகம்) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எஸ் அண்ட் பி 500 குறியீட்டில் நிவிடியாவின் பங்கு தற்போது 8% க்கு நெருங்கி உள்ளது. இதன் வருவாயில் 40% மைக்ரோசாப்ட், ஆல்பாபெட், மெட்டா, அமேசான் ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது.

இதனால், நிவிடியா அமெரிக்க சந்தையின் பெல்வெதர் பங்காக பார்க்கப்படுகிறது.
ஆனால், அதிகமான எதிர்பார்ப்புகளுக்கிடையில் சிறிய ஏமாற்றம்கூட பங்குச் சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Nvidiaவின் முடிவுகள், உலகளாவிய சந்தை உயர்வைத் தொடர்ந்து நிலைநிறுத்துமா அல்லது அதிக மதிப்பீட்டு அழுத்தத்தால் வீழ்ச்சியா என்பதை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *