22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டிரம்ப்பின் வரி விதிப்பால் வழக்குகள், விற்பனை பாதிப்பு ஏற்படும்: என்விடியா எச்சரிக்கை

டிரம்ப்பின் வரி விதிப்பால் வழக்குகள், விற்பனை பாதிப்பு ஏற்படும்: என்விடியா எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சிப்களை விற்பனை செய்வதற்கு 15% கட்டணம் விதிக்க முன்மொழிந்துள்ளார்.

இந்த முன்மொழிவு, என்விடியா நிறுவனத்திற்கு சட்ட சிக்கல்களையும், செலவு அதிகரிப்பையும் ஏற்படுத்தும் என்றும், இதனால் அமெரிக்க நிறுவனங்களின் போட்டித்தன்மை குறைந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும் என்றும் என்விடியா எச்சரித்துள்ளது.


அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, என்விடியா, அதன் போட்டியாளரான ஏ.எம்.டி. நிறுவனங்கள் சீனாவுக்கு ஏஐ சிப்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும். ஆனால், அதற்கு பதிலாக, விற்பனையின் வருவாயில் 15% தொகையை அமெரிக்க அரசாங்கத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த திட்டம் இன்னும் ஆரம்பகட்ட விவாதத்தில் தான் உள்ளது.

டிரம்ப் நிர்வாகம் விதித்த வர்த்தகத் தடைகள் காரணமாக, ஏப்ரல் 2025-ல் என்விடியாவின் எச்20 சிப்களுக்கான ஏற்றுமதி உரிமங்கள் நிறுத்தப்பட்டன. இதனால், என்விடியாவுக்கு $4.5 பில்லியன் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 2025-ல் சில எச்20 சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி கிடைத்தாலும், இதுவரை ஒரு சிப் கூட ஏற்றுமதி செய்யப்படவில்லை என என்விடியா தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த சிக்கலுக்குத் தீர்வு எட்டப்படாவிட்டால், வேகமாக வளர்ந்து வரும் சீனத் தரவு மைய சந்தையில் இருந்து என்விடியா வெளியேற நேரிடும் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏ.ஐ சிப் சந்தையில் என்விடியாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற பல நாடுகளின் கட்டுப்பாட்டு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த விசாரணைகள் நிறுவனத்திற்கு கூடுதல் செலவையும், வாடிக்கையாளர்களுடனான உறவில் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும் என என்விடியா கூறுகிறது. இதற்கிடையில், சீனா தனது நிறுவனங்களை அமெரிக்க தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை குறைக்குமாறு ஊக்குவித்து வருகிறது.


என்விடியா தனது நடப்பு காலாண்டுக்கான வருவாய் கணிப்பை $54 பில்லியனாக குறைத்துள்ளது. இது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பை விட குறைவானது. புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, சீனாவின் விற்பனையில் இருந்து $5 பில்லியன் வருவாய் இழப்பு ஏற்படலாம் என நிறுவனம் கூறியுள்ளது. இந்த சிக்கல்களை தீர்க்க, அடுத்த தலைமுறை சிப்களான ‘பிளாக்வெல்’ மாடல்களை சீனச் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருவதாக என்விடியா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *