ஒ…ஓ…ரயில் பணியாளர்களின் தரவுகள் திருட்டா?
இந்திய ரயில்வேவில் பயணிகளின் 3 கோடி தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஷேடோ ஹாக்கர் என்ற பக்கத்தில் இந்த தரவுகள் கசிந்துள்ளது. பல்வேறு அரசு சார்ந்த மின்னஞ்சல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. , 3 கோடி பேரின் பெயர், போன்கள்,மின்னஞ்சல், மற்றும் பிற தகவல்களும் வெளியாகியுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதா இல்லை ரயில்வே இணையதளமா என்ற தகவலை இதுவரை ரயில்வே வெளியிடவில்லை. இந்திய ரயில்வேவில் பயணிகளின் தரவுகள் திருடப்படுவது ஒன்றும் புதிதல்ல, 2020ம் ஆண்டு 90 லட்சம் பேரின் தரவுகள் திருடப்பட்டதாகவும் கூறப்பட்டது. 2019ம் ஆண்டு 30 லட்சம் பேரின் தரவுகள் டார்க்வெப் நெட்வொர்க்கில் திருடப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சாதாரண மக்களின் தரவுகள் கசிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தரவுகளை ஏன் அரசு சார்பில் பாதுகாக்கவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.