விமர்சனங்களை புறந்தள்ளும் அதிகாரி..
மூத்த பொருளாதார ஆலோசகராக இருப்பவர் அனந்த நாகேஷ்வரன்.இவர் அண்மையில் எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்திருக்கிறார்.இந்தியாவின் முதல் காலாண்டின் உள்நாட்டு உற்பத்தி அளவில் மாற்றம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது பற்றி பேசிய அனந்த நாகேஷ்வரன், இதே புள்ளிவிவரம் 2020ஆம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை இந்தியா சந்திததாக கூறியபோது ஏன் சிலர் ஏற்கவில்லை என்றும் கேட்டார். முதல் காலாண்டில் 2.8%அளவுக்கு வளர்ச்சி இருந்ததாக கூறுவதில்மாறுபாடு இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வளர்ச்சி அடைந்ததாக கூறப்படும் அனந்த நாகஷ்வரனின் விளக்கத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ரீ போஸ்ட் செய்திருக்கிறார். 2020-21 காலகட்டத்தில் இதே அறிக்கையில் இந்தியாவின் பாதிப்பு கிட்டத்தட்ட 25%என்று கூறியபோது இப்போது வளர்ச்சி இல்லை என்று சொல்பவர்கள் இந்த புள்ளிவிவரத்தை நம்பக்கூடாது என்றார்களே என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்தியாவின் முதல் காலாண்டின் வளர்ச்சியாக அரசு வெளியிட்ட தரவுகளை சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த பிரச்னை பூதாகரமாக மாறியுள்ளது. ஜி20 உச்சிமாநாட்டுக்காக போலியான தரவுகள் மிகைப்படுத்தி சொல்லப்படுவதாக அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அசோகா மாடி கூறியுள்ளார். இந்தியாவில் வளர்ச்சி என்பது குறைவாக இருக்கிறது.சமநிலை மாறுபடுகிறது என்றும் மாடி தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட் நேரத்தில் போதுமான பணம் செலவு செய்யப்பட்டதாகவும், அதே நேரம் அதிக செலவும் செய்யப்படாமல் சமாளித்ததாக அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார். மக்களுக்காக செய்த செலவு இந்தியாவில் பொருளாதார சமநிலையை அளித்துள்ளதாகவும் அவர் கம்பு சுத்தியுள்ளார்.வரும் நாட்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும் அனந்த நாகேஷ்வரன் கூறியுள்ளார்.