ஓ!!!! இப்படித்தான் லாபம் பண்றீங்களா???
அமெரிக்கா மற்றும் உலகளவில் பிரபலமாக உள்ளது அமேசான் நிறுவனம், அமேசானின் துணை நிறுவனமாக உள்ளது அமேசான் பிளக்ஸ் சர்வீஸ். அமேசான் நிறுவனம் சரியான முறையில் ஊதியம் அளிக்கவில்லை என்றும் அது தொடர்பாக பிளக்ஸ் சர்வீஸூக்கும் அமேசானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து டிப்ஸ் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பிரச்னையில் கொலம்பியா அட்டார்னி ஜெனரலும் மாவட்ட நிர்வாகமும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
வாங்கிய பொருளுக்கு மட்டுமே பணம் தர வாடிக்கையாளர்களுக்கு உரிமை உள்ளதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. தங்கள் துணை நிறுவனத்துக்கே அமேசான் உரிய சம்பளம் தராததால்தான் , பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்கள் டிப்ஸ் கேட்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறும் அமேசான் நிறுவனம், ஊழியர்கள் தங்கள் சொந்த வாகனத்தில் டெலிவரி செய்வதற்கும் அவர்கள் பெறும் டிப்ஸை கூட நிறுவனம் எடுத்துக் கொள்வதாக சாடியுள்ள கொலம்பியா நிர்வாகம், அமேசான் ஊழியர்களுக்கு சாதகமாக பேசியுள்ளது.