கையைகடிக்கும் பொருட்கள் விலை.. – அதிகரிக்கும் பணவீக்கம்..!!
வரும் ஏப்ரலில் தொடங்கவிருக்கும் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போரின் தாக்கம் சமையல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளில் எதிரொலிப்பதால் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க முன்னறிவிப்பை அது கட்டாயப்படுத்தலாம்.
இந்த மாதம் உ.பி உள்ளிட்ட முக்கிய மாநில தேர்தல்கள் முடிவடைந்தவுடன், எண்ணெய் விலைகள் உயர மத்திய அரசு அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிக எரிவாயு உருளையின் விலைகள் இம்மாத தொடக்கத்தில் 105 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு விலையில் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் மட்டும் பிரச்சனை இல்லை. உலகச் சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெயைப் பொறுத்தவரையில் 80% உக்ரைன் மற்றும் ரஷ்யா பங்கு வகிக்கிறது.
இதனால் ஏப்ரலில் தொடங்கவிருக்கும் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.