என்னது எலக்ட்ரிக் காரும் வருதா? ஓலா கிட்ட இருந்து? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி மின்சார வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது ஓலா. ஓலா நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கவும் உள்ளது. நிறுவனம் 2023 க்குள் மின்சார வாகனத் தயாரிப்புத் திட்டத்தில் ஈடுபடலாம் என்று ஓலாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
ஓலா தற்போது மின்சாரக் கார்களை விற்கவில்லை என்றாலும், அதன் துணை நிறுவனமான ஓலா கேப்ஸ், இந்தியாவின் பல நகரங்களில் நான்கு சக்கர மின்சார கார் வாடகை வணிகத்தை நடத்துகிறது. அத்தகைய மின்சாரக் கார்களை சார்ஜ் செய்வதற்கான மையங்களையும் செயல்படுத்துகிறது.
தமிழ்நாட்டில், தனது கிருஷ்ணகிரி ஆலையை மேம்படுத்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது திட்டமிட்டு வருவதாக அகர்வால் கூறினார். ஓலா அதன் எதிர்கால மின்சார வாகன உற்பத்திக்கு இந்த ஆலையைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ₹99,999 விலையில் தொடங்குகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அக்டோபர் 2021 முதல், மின்சார இரு சக்கர வாகனங்களை முழுவீச்சில் சந்தைக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.