அடுத்த வருடம் வருகிறது ஓலா மின்சார கார்?
குறுகிய காலகட்டத்தில் இந்தியா முழுக்க பிரபலமடைந்த பெயராக ஓலா மின்சார ஸ்கூட்டர் நிறுவனம் மாறியுள்ளது. இந்த நிலையில் தங்கள் மின்சார காரை வரும் 2024 பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஓலா நிறுவனத்தின் மூத்த நிதி அதிகாரி ஜி.ஆர் அருண்குமார் தெரிவித்துள்ளார். புதிய மின்சார காரில் தற்போது ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் அதே நுட்பங்களை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் மென்பொருட்கள்,பாதுகாப்பு அம்சங்கள்,மின்சாதன பொருட்கள் பவர் டிரெயின் என அனைத்தும் பைக்குக்கும் காருக்கும் பொதுவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ள ஓலா நிறுவனம் இந்திய ஆற்றல் வாரவிழாவினை சுட்டிக்காட்டிய அந்நிறுவன அதிகாரிகள் தங்கள் நிறுவனம் ஆற்றல் வார விழாவின் நோக்கத்துடன 40%வரை ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளனர் ஏற்கனவே சந்தையில் உள்ள மின்சார கார் உற்பத்தியாளர்களான டெஸ்லா, டாடா, ஹியூண்டாய் நிறுவனங்களுடன் ஓலா போட்டியிட உள்ளது 100 ஜிகாவாட்ஸ் பேட்டரி செல் தயாரிப்பை உள்ளூரிலேயே தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் 10 ஜிகாவாட் உற்பத்தி 18 முதல் 24 மாதங்களிலும் 20 ஜிகாவாட்ஸ் மணி நேர உற்பத்தி அடுத்த 36மாதங்களிலும் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்துக்கு தேவையான கட்டமைப்பையும் அந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது