பற்றி எரியும் E-Bike-குகள்.. – திரும்ப பெறும் நிறுவனங்கள்..!!
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் 1,441 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது அனைவரும் Electric இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை விரும்ப தொடங்கியுள்ளனர். பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களும், எலக்ட்ரிக் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், வாகன ஓட்டிகளையும், வாகன உற்பத்தியாளர்களையும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களை திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் 1,441 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுகிறது. புனேயில் மார்ச் 26 அன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது..
Okinawa மற்றும் Pure EV, தங்கள் வாகனங்களில் தீ விபத்துகள் பதிவாகியதைத் தொடர்ந்து தங்கள் இ-ஸ்கூட்டர்களை தானாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.