ஓலாவின் மின் ஸ்கூட்டர் தயாரிப்பில் சிக்கல் !
இந்தியாவில் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்கும் ஓலா நிறுவனத்தின் கனவு இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டது. ஓலா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓவுமான பவிஷ் அகர்வால் ஆட்டோ மொபைல் துறையில் இறங்க முடிவு செய்தார். பல மாத உழைப்பிற்கு பின் சமீபத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டரை புக் செய்த 100 நபர்களுக்கு பைக்குகள் வழங்கப்பட்டன.
ஓலா மொபிலிட்டி நிறுவனம் இதுவரை 96 ஆயிரம் பைக்குகளை புக் செய்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து பைக்குகளின் டெலிவரி துவங்கும் என்று அறிவித்த நிலையில் டிசம்பர் மாதத்தில்தான் தொடங்கியது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே போச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஆலையில் 50 சதவீதம் தான் வேலை செய்கிறது. ஒரு நாளுக்கு சுமார் 150 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.
சிப் தட்டுப்பாடு, உற்பத்தி தொய்வுக்கு ஒரு காரணம் என்றாலும் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்ற காரணத்தால் தயாரிப்பில் பின்னடைவைச் சந்திக்கிறது. ஓலா மின் வாகன நிறுவனம் 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீட்டை ஈர்த்து வரும் நிலையில். ஐபிஓவை வெளியிட திட்டமிட்டு அதற்கான பணியை செய்து வருகிறது.