பழைய ஓய்வூதியம் பின்னடைவாம்…
சில மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசாங்கங்கள் முயற்சிகளை செய்வது ரிசர்வ் வங்கிக்கு பின்னடைவை தரும் பெரிய பிரச்னை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மாதந்தோறும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அப்படி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,பழைய ஓய்வூதிய திட்டம் என்பது பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்றும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. இது அங்குள்ள அரசு அதிகாரிகளின் கருத்தே தவிர்த்து ரிசர்வ் வங்கியின் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அண்மையில் டிவி.சோமநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற இமாச்சல பிரதேச அரசு முயற்சிகளை செய்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்களின் கடைசி மாத சம்பளத்தின் அளவில் 50 விழுக்காடு ஓய்வூதியமாக வழங்கப்படும் அம்சமாகும். தேசிய பென்ஷன் திட்டம் என்பது அடிப்படை சம்பளத்தில் 10விழுக்காடும்,அரசாங்கம் 14விழுக்காடும் அளிக்கும் முறையாகும். கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் வருவாயை விட பென்ஷனுக்கு பல மடங்கு அதிக செலவாகிறது என்று ரிசர்வ் வங்கி ஊழியர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2023 மார்ச் வரை விழுந்துள்ள பென்ஷன் அழுத்தம், தேசிய பென்ஷன் திட்டம் 2084க்கு நிகரான அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.