ஒன்றரை லட்சம் கோடி ஊ.. ஊ..!!!!
இந்தியாவில் Reliance Industries,TCS, HDFC Bank, ICICI Bank, Infosys, Hindustan Unilever, ITC, Bharti Airtel, State Bank of India and Bajaj Finance ஆகிய 10 நிறுனங்கள் டாப் 10 நிறுவனங்களாகும். இந்திய சந்தைகள் கடந்தவாரம் பெரிய பாதிப்புகளை சந்தித்து இருந்தது. இதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டது. குறிப்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் பெரிய பாதிப்பை சந்தித்தன. டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1லட்சத்து 52ஆயிரத்து979 கோடி ரூபாய் சரிந்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 885 புள்ளிகள் சரிந்தது. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 34ஆயிரத்து 876 கோடி சரிந்து 15லட்சத்து 55ஆயிரத்து 531 கோடி ரூபாயாக சரிந்தது. இதேபோல் கடந்த வாரத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 27,827 கோடி ரூபாய் சரிந்து 12 லட்சத்து 78,564.03 கோடி ரூபாயாக சரிந்தது. Hindustan Unilever நிறுவனத்தின் சந்தை மதிப்புப18,103 கோடி வீழ்ந்து 5,86ஆயிரத்து 223 கோடி ரூபாயாக சரிந்தது. இதேபோல் Bajaj Finance பங்குகள் 17, 171 கோடி வீழ்ந்து 4,70,574 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.நிலைமை இப்படி இருக்க ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் ஒன்றும் விதிவிலக்கல்ல என்பது போல அந்நிறுவன சந்தை மதிப்பு 13,518 கோடி ரூபாய் வீழ்ந்தது. இதனால் அந்த நிறுவன சந்தை மதிப்பு 6,53,120.67 கோடி ஆனது. ஐடிசி நிறுவன பங்குகளின் மதிப்பும்12,533 கோடி ரூபாய் குறைந்து 5.46 லட்சம் கோடி ரூபாயானது. State Bank of Indiaவின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் மட்டும் 11,512.75 கோடி ரூபாய் சரிந்தது.இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 5.02 லட்சம் கோடியானது. எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் 10,1387 கோடி ரூபாயாகவும், Bharti Airtel நிறுவனம் 5,139.88 கோடி ரூபாய் மதிப்பு வீழ்ந்து 5.30லட்சம் கோடி ரூபாயாக மாறியுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1,909.18 கோடி சரிந்து,5,92,342.82 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.