உம்மேல ஒரு கண்ணு!!!
மலிவான விலையில் எரிபொருள் எங்கு கிடைக்கும் என்று தேடும் நபர் இந்தியாவை பின்பற்றினாலேயே போதும் என்ற அளவுக்கு மிக சாமர்த்தியமாக இந்தியா மலிவான விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்த நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து நெடுங்காலத்துக்கு பெட்ரோலிய பொருட்கள் வாங்க திட்டமிட்டு வருகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் ரஷ்யாவிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் அதிகளவில் கச்சா எண்ணெயை வாங்க பாரத் பெட்ரோலியம் முடிவு செய்து பணிகளை செய்து வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிடம் உலகமே ஆச்சர்யப்படும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் இந்தியா எண்ணெயை வாங்கி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்துதான் கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என்று சில நாடுகள் தடை விதித்துள்ளன. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெயை சுத்தீகரித்து இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோல்,டீசல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் பாரத் பெட்ரோலியத்தின் 22% பங்களிப்பை தருவதாகவும், பாரத் பெட்ரோலியத்தின் 90 % கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுவதாகவும்,ஆண்டுக்கு 4 கோடி டன் கச்சா எண்ணெயை Bpcl நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.