எங்களுக்கு ஒரு சட்டம்.. உங்களுக்கு ஒரு சட்டம்!!!
1968ம் ஆண்டு லண்டன் தங்கச்சந்தை இரண்டு வாரத்துக்கு மூடப்பட்டது. அமெரிக்காவுடன் ஏற்பட்ட 5 மாத இழுபறியின் விளைவாக இவ்வாறு செய்யப்பட்டது. இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை 2008ம் ஆண்டுக்கு பிறகு அதிகளவில் தங்கத்தை அதிகம் வாங்கி வருகின்றன. உலகநாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் கடந்தாண்டின் 3-வது காலாண்டில் மட்டும் 400 டன் அளவுக்கு தங்கத்தை வாங்கியுள்ளன. ஜனவரியில் இருந்து செப்டம்பர் வரை மட்டும் 670 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது. ஆபத்து காலகட்டங்களி்ல் தங்கத்தை விற்று பணமாக்குவதால் மத்திய வங்கிகள் பெருமைக்காகவும் வாங்கி குவித்து வருகின்றன. டாலரின் மதிப்பை குறைக்க தங்கம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதும் பொருளாதார நிபுணர்கள் கருத்தில் முக்கியமானதாக உள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணக்கு வழக்கு இல்லாமல் வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல நாட்டு ரொக்க பணமும் வலுவிழந்து வருகிறது. ஆனால் தங்கம் மதிப்பு கூடி வருவதால் மத்திய வங்கிகளின் கவனம் தற்போது தங்கம் பக்கம் திரும்பியது. ரஷ்யா மீது பல்வேறு தடைகளை பல நாடுகள் விதித்தாலும் அந்நாட்டு பணம் மதிப்பை இழந்தாலும், தங்கம் மட்டும் அந்நாட்டு மதிப்பை இழக்காமல் உள்ளதும் உலக நாடுகள் தங்கத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி வைக்க முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. மக்கள் தங்கத்தை வாங்கினால் அந்நிய செலாவணி அதிகம் தேவைப்படுகிறது என்று தான், பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினால் அந்த பிரச்சனை வராதா என்ற கேள்வி மக்கள் மனதில் நீண்ட நாட்களாகவே இருப்பதை மறுப்பதற்கு இல்லை.