$ 840 மில்லியன் திரட்டிய “ட்ரீம் ஸ்போர்ட்ஸ்” ஆன்லைன் கேமிங் பிளாட்பார்ம் !
ஆன்லைன் ஃபேன்டஸி கேமிங் பிளாட்பாரமான ட்ரீம் 11ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 840 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. ஃபால்கன் எட்ஜ், டிஎஸ்ட்டி குளோபல், டி1கேப்பிடல், டைகர் குளோபல், ரெட் பேர்ட், டிபிஜே மற்றும் புட்பாத் ஆகிய பழைய, புதிய முதலீட்டாளர்கள் இந்த நிதி திரட்டலில் பங்கு பெற்றனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர்கள் ஆகும்.
மார்ச் மாதத்தில் 400 மில்லியன் டாலர்களை பெற்றதன் பின்னணியில் இந்த புதிய நிதியுதவி வருகிறது. ஹர்ஷ் ஜெயின் மற்றும் பவித் சேத் ஆகியோரால் 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம், விளையாட்டுகளை மேலும் விரிவுபடுத்த, விளையாடுபவர்களை ஊக்குவிக்க, உடற்பயிற்சி நிறுவனங்களை உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் உருவாக்குவதற்காக இந்த முதலீடு திரட்டப் படுகிறது. ட்ரீம் 11 என்பது எம்.எஸ்.டோனியை வைத்து ஐபிஎல் போட்டித்தொடர் காலத்தில் பெருமளவில் விளம்பரம் செய்து பயனாளர்களை பெருக்கியது குறிப்பிடத்தக்கது.