உயர் ரக மருந்துகளை தயாரிப்பது எங்க நோக்கம்!!!
இந்தியாவின் முக்கியமான துறைகளில் ஒன்றாக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை என்றால் அது மிகை அல்ல. இந்த சூழலில் இந்தியாவில் உயர் ரக மருந்து உற்பத்தியை செய்ய தீவிர முயற்சிகள் நடப்பதாக அந்த துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.இதனால் வெளிநாட்டு இறக்குமதி குறையும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியா சுயசார்பை எட்டுவதற்கு மருத்துவ உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உயர் ரக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்ய உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கப்பட இருக்கிறது.166 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத் தொகை அளிக்கப்பட இருக்கிறது. குறிப்பிட்ட இந்த ஊக்கத் தொகை அடுத்த 6 ஆண்டுகளில் 15ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்பட இருக்கிறது. மொத்தம் 55நிறுவனங்களில் 20 சிறு குறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,2022-23 நிதியாண்டில் முதல் ஆண்டில் மட்டும் 690 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். 55 நிறுவனங்கள் மொத்தமாக 16ஆயிரத்து199 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த துறையில் மொத்தமாக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் அடுத்த 6 ஆண்டுகளில் கிடைக்கும் என்றும் கூறினார்.மீதமுள்ள ஊக்கத்தொகை பரிசீலனையில் உள்ளதாகவும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பிரிவில் 21 நிறுவனங்கள் தேர்வாகியுள்ளதாகவும், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை இந்த துறைக்கு 3 ஆயிரத்து 420 கோடி ரூபாயாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.