லட்சம் கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நம்ம ஊர் நிறுவனம்!!!

பெப்சி நிறுவனம் இத்தனை பெரிய வளர்ச்சி அடைந்திருப்பது ஒன்றும் ஓரிரு நாளில் நடந்துவிடவில்லை. இந்தியாவில் அந்த நிறுவனத்துக்கு என பாட்டில் தயாரித்தல், கடைகளுக்கு கூல்டிரிங்க்ஸ் அனுப்பி வைத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வலுவான நெட்வொர்க் இயங்கி வருகிறது. இதில் பாட்டில் தயாரிக்கும் பிரபல நிறுவனமாக வருண் பிவரெஜஸ் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் பிரதான சாலையிலேயே ஆலையை வைத்திருப்பதை பலரும் பார்த்திருப்பீர்கள், இந்த நிறுவனம் இந்தியாவின் பல நகரங்களில் பெப்சி நிறுவனத்துக்கு பாட்டில் செய்து தருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1லட்சம் கோடி ரூபாயை கடந்திருக்கிறது. 2022ம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு 123% ரிட்டன்ஸ் கிடைத்திருக்கிறது.கடந்த புதன்கிழமை மட்டும் ஒரே நாளில் இந்த நிறுவன பங்குகள் 7 விழுக்காடு உயர்ந்தது. ஒரு நாளில்பதிவான அதிகபட்ச லாபம் இதுவாகும். ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வளர்ச்சியாக வருண் பிவரேஜ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வரை 429 கோடி ரூபாய் வருமானத்தை பதிவு செய்திருக்கிறது.மொத்த வருவாய் உயர்வு 38%அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் 49வது இடத்தையும் பிடித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி 24 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஸ்டிங் என்ற புதிய குளிர்பானம்,புதிய பால் பொருட்கள் என பல பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது வருண் பிவரேஜஸ்.