பணமில்லாமல் அவுட்சோர்சிங்…..
பக்கத்து நாடான பங்காளி நாடு பாகிஸ்தானில் கடந்த பல மாதங்களாக நிதி சிக்கல் தலைவிரித்தாடுகிறது.இந்த நிலையில் உரிய வருவாய் இல்லாததால் அரசின் வசம் உள்ள சில துறைகளை அவுட்சோர்சிங் செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக இஸ்லாமாபாத் விமான நிலையத்தை இயக்க அவுட்சோர்சிங் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் அரசு விமான நிலையத்தை நிர்வகிக்காது என்றும்,அவுட்சோர்சிங் செய்து விமான நிலைய பராமரிப்புகளை மேற்கொள்வது என்று பாகிஸ்தான் அரசு நியமித்த குழு தெரிவித்துள்ளது.
இந்த புதிய அவுட்சோர்சிங் முறை காரணமாக விமான விதிகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்விமான நிலையத்தை அவுட் சோர்சிங் செய்வது தொடர்பாக கடந்த மார்ச் 31ஆம் தேதியே இறுதி முடிவு எட்டப்பட்டுவிட்டது. பிபிபி எனப்படும் அரசும் பொதுமக்களும்,தனியாரும் இணைந்து செயல்படும் முறைதான் இந்த விமான நிலையத்தை அவுட்சோர்சிங் செய்ய இருக்கிறது. இஸ்லாமாபாத் மட்டுமின்றி, கராட்சி, லாகூர் விமானங்களையும் இனி அரசு நிர்வகிக்கப்போவதில்லை. பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விமானங்களை இயக்கும் விமானிகளின் கல்வித்தகுதி, பாதுகாப்பு அம்சங்களில் கேள்விக்குறி எழுந்த நிலையில் பாகிஸ்தானில் பிஐஏ விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன.