பல ஆண்டுகளாக பில்கேட்ஸ் அப்படித்தான்…
உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் பல ஆண்டுகளாக எக்னாமி கிளாசில்தான் விமான பயணம் செய்துவருவதாக நெட்பிளிக்ஸ் இணை நிறுவனர் மார்க் ரான்டல்ப் தெரிவித்துள்ளார். மார்க் தனது எக்ஸ் பக்கத்தில் பில்கேட்ஸ் பற்றி ருசிகரமான தரவுகளை பதிவிட்டுள்ளார். பில்கேட்ஸ் நினைத்தால் ஒரு நொடியில் ஒரு சொகுசு ஜெட் விமானத்தை வாங்கலாம்,ஆனால் அவர் அதனை செய்யவில்லை என்று மார்க் நெகிழ்ந்துள்ளார். ஒரே விமானத்தில் சாதாரண ரக சீட்டின் விலையை விட முதல் வகுப்பு டிக்கெட் விலை 6 மடங்கு வரை அதிகம் என்றும்,இதனால்தான் பில்கேட்ஸ் அதனை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதில் பில்கேட்ஸ் சிறந்தவர் என்று கூறியுள்ள மார்க்,லம்போர்கினி போன்ற விலையுயர்ந்த கார் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாட்டில் ஒயினுக்கு ஆயிரம் டாலர் செலவு செய்ய விரும்பவில்லை என்றும், 35 டாலரில் உள்ள மதுவகையிலும் அதே அளவுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் மார்க் குறிப்பிட்டுள்ளார். பணமும் நேரமும் எப்போதும் பாதுகாப்பையும் வளையும் தன்மையையும் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். உங்கள் மனதுக்கு பிடித்ததை செய்ய அதிக பணம் செலவிட தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.