பான்-ஆதார்!!! அடுத்து என்ன??
இந்தியாவில் ஆதார் கார்டையும் பான் கார்டையும் இணைக்க பல மாதங்களாக மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு கார்டுகளையும் இணைக்கும் கடைசி தேதி கடந்த 30 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. இதனை பயன்படுத்திக்கொள்ளத் தவறியவர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். எனினும் பான் கார்ட் – ஆதார் கார்டு இணைப்புக்கு இதுவரை எந்த அவகாசமும் நீட்டிக்கப்படவில்லை.
அப்படி பான்-ஆதார் கார்டை இணைக்காதவர்களுக்கு என்ன ஆகும் என்பதை பார்க்கலாம். உடனடியாக பான்கார்டு செயலிழந்துவிடும். இணைப்புக்கான காலம் தவறியபிறகு பான் கார்டை மட்டும் இயங்க வைக்க வேண்டுமெனில் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஆயிரம் ரூபாய் பணம் கட்டிவிட்டால் உடனடியாக இணைப்பு சாத்தியமாகாது. பான் கார்டு இணைக்கப்பட்டதில் இருந்து 30 நாட்களுக்கு பிறகுதான் உங்கள் பான் என் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். முதலில் இ-பைலிங் இணையதளத்துக்கு செல்லவேண்டும், அதில் ஆதாருடன் பானை இணைக்க வேண்டும் என்ற லிங்க் இருக்கும் அதை தேர்வு செய்யவேண்டும்,விவரங்களை நிரப்பிய பிறகு இ-பே டாக்ஸ் என்ற வசதியை தேர்வு செய்யவேண்டும். பான் எண்ணுக்கு பிறகு செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். அதற்கு உண்டான தொகையை செலுத்திவிட்டதும் இணைப்பு நடந்துவிடும், இதில் இருந்து 30ஆவது நாள் பான் கார்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிடும். பான்கார்டை இணைக்காவிட்டால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதை கீழே பட்டியலிடுகிறோம் பாருங்கள்..
*பான் கார்டு செயலிழந்துவிடும்.
*ஐடி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய இயலாது.
*நிலுவையில் உள்ள ரிட்டர்ன்ஸ் கிடைக்காது.
*அதிகபட்ச வரி உங்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
அசாம்,மேகாலயா,ஜம்மு-காஷ்மீர், 80 வயதுக்கு மேல் உள்ளோர்,இந்தியர்கள் அல்லாதோர் பான் கார்டு இணைக்க வேண்டிய அவசியமில்லை.