பனாமா பேப்ர்ஸ் விவகாரம்: 41 கோடிமதிப்புள்ள பொருட்கள் சீஸ்…!!!
இந்தியாவின் உச்சபட்ச விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை மே 8ம் தேதி மும்பையின் பரபரப்பான பகுதியில் சோதனைகளை நடத்தினர்.என்ன விஷயம் என்று விசாரித்தால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. 3 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பனாமா பேப்பர்ஸ் என்ற மோசடி கும்பலில் பெயர் அடிபட்ட பிரபலங்களில் ஒருவரின் அலுவலகம் என்று கூறப்படுகிறது.முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ள நிலையில் 41 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். Zavareh Soli Poonawalla என்ற நபர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் சொந்தமான நிறுவனங்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட LRS வகை பரிவர்த்தனைகளை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. FEMA எனப்படும் வெளிநாட்டு பரிமாற்ற நிர்வாக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட இந்த நபரின் குடும்பத்தினர் 2011-12 காலகட்டத்தில் பெரிய அளவு பணத்தை சட்டவிரோதமாக கொண்டுவந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. வெளிநாட்டிலேயே யாரும் இல்லாத நிலையில் தனது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவதாகவும் சில பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் தனிப்பட்ட ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு பனாமா நிறுவனத்தின் உலகின் பல முன்னணி பிரபலங்கள் கருப்புப்பணத்தை முதலீடு செய்ததாக எழுந்த புகார் 2016-ல் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஒன்றாகும். இப்போது அது தொடர்புடைய நபர் ஒருவரின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல்இத்தனை பெரிய தொகையை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கோ, வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கோ மாற்றியது குற்றமாகும். வெளிநாட்டில் எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத முதலீடுகள் நடந்ததோ அதற்கு நிகரான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியிருக்கின்றனர்.