சோலார் வணிகத்தை சூடுபடுத்தும் பேனசோனிக் நிறுவனம்
பேனசோனிக் நிறுவனம் இந்தியாவின் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமான ஒரு நிறுவனமாகும்.ஜப்பானைத் தலைமை இடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கினாலும் இந்தியாவின் கிளை பிரிவுகளும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தற்போதுள்ள சோலார் உற்பத்திகளை இருமடங்காக்க கடும் முயற்சிகளை செய்து வருகிறது..மேலும் ஏற்றுமதியிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வீடுகளுக்கு ஒயரிங் உள்ளிட்ட பணிகள் தொடர்பான சோலார் கட்டமைப்பில் 6%வணிகம் நடப்பதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டை இலக்க ஏற்றுமதியை உறுதிசெய்ய பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.தற்போது வரை இந்தியாவின் சோலார் பங்களிப்பில் தங்கள் நிறுவனம் 3-3.5%ஆக இருப்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 5%ஆக உயர்த்த திட்டமிட்டு வருவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மார்ச் 31 ஆம் தேதி வரை ஏற்றுமதி 25%ஆக இருந்ததாக கூறும் அந்த அதிகாரி இந்த நிதியாண்டில் அதை 30%ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மொத்த ஏற்றுமதியான 30விழுக்காட்டில் மேட் இன் இந்தியா திட்டத்தில் மட்டும் 10 முதல் 12%உற்பத்தியாவதாகவும் கூறியுள்ளார்.