பங்காளிக்கு நோ சொன்ன இந்தியாவின் கூட்டாளி!!!!
இந்தியாவின் நெருக்கடியான சூழல்களில் உதவி செய்வதில் ரஷ்யாவின் பங்கு எப்போதுமே அலாதியானது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையை 30முதல் 40%வரை குறைத்து வழங்கும்படி ,ரஷ்யாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. இதனை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளது மாஸ்கோவில் ரஷ்ய மந்திரியை சந்தித்த பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக்,கச்சா எண்ணெய் விலையை குறைத்து வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதனை பரிசீலிப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யாவின் தரப்பு தற்போது அவ்வளவு எல்லாம் குறைத்து தரமுடியாது. என திட்டவட்டமாக தெரிவித்தது தனக்கு விருப்பமான நாடுகளுக்கும் மொத்தமாக எண்ணெய் கொள்முதல் செய்வோருக்கும் மட்டுமே சலுகைகளை அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் அநியாய விலைக்கு கேட்பதாகவும் தகவல் கசிந்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடுக்க முடியாது என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் வீராப்பாக பேசியிருந்த நிலையில், ரஷ்யா தற்போது சலுகையெல்லாம் தர முடியாது என கைவிரித்துள்ளதால் பாகிஸ்தான் தற்போது திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.