பயணிகள் வாகன விற்பனை சரிவு !
உள்ளூர் சந்தையில் தேவைகள் இருந்தாலும்,செமி கண்டக்டர்களின் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக நவம்பரில் தொடங்கி மூன்று மாத காலமாக பயணிகள் வாகன விற்பனை இரட்டை இலக்கமாக சரிந்தது.
தென்னிந்திய ஆட்டோமொபைல் சங்க (சியாம்)தரவுகள்படி கடந்த மாதம் பயணிகள் வாகன விற்பனை 18.6 சதவீதம் குறைந்து 2,15,626 ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் உள்பட தொழில்துறையின் அளவு சுமார் 14 சதவீதம் சரிந்தது. நவம்பர் மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸ் 29,778 கார்களை விற்பனை செய்துள்ளது.
இரு சக்கர வாகன விற்பனையை பொருத்தவரை 34 சதவீதம் குறைந்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 39 சதவீதம் சரிந்து, 3,06,899 ஆகவும், மோட்டார் சைக்கிளின் விற்பனை 32 சதவீதம் குறைந்து 6,99,949 ஆகவும் இருந்தது.
இதற்கிடையில் செமி கண்டக்டர்கள் விநியோகத்தில் ஸ்திரத்தன்மை, எரிபொருள் விலை குறைப்பு ஆகியவை உள்நாட்டின் விற்பனையை தூண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.