போரால் காப்புரிமை தொகை உயர்கிறதாம்..
இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சூழலில் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையேயான தாக்குதலால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான காப்பிீட்டு உரிமை மற்றும் கப்பல் ஏற்றுமதி கட்டணங்கள் கணிசமாக உயர இருக்கின்றன. உலகளாவிய வர்த்த ஆராய்ச்சி முன்னெடுப்பின் தலைவர்கள் இது தொடர்பாக பேசுகையில்,பொருட்கள் ஏற்றுமதிக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ளன என்றார்.. ஹமாஸ் பிரிவினரின் சண்டையால் துறைமுகங்கள் கைப்பற்றப்பட்டால் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.இஸ்ரேலின் ஹைஃபா, அஸ்தூத் மற்றும் எய்லட் ஆகிய 3 துறைமுகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.
இதன் காரணமாக விவசாயம்,சமயைல் பொருட்கள், மருந்துகள்,ஏற்றுமதி தடைபட்டுள்ளது. துருக்கி, கிரீஸ், எகிப்து மற்றும் லிபியா வழியாக பொருட்கள் எடுத்துச்செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. சந்தா அதிகரித்தது மட்டுமின்றி,காத்திருப்பு நேரங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்தியா -இஸ்ரேல் இடையே 12 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. ஆடைகள் மட்டும் 8.4அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. ஆடைகள் தவிர்த்து மின்சாதன பொருட்களும் எடுத்துச்செல்லப்படுகிறது. எலியாட் துறைமுகத்துக்குத்தான் பெரும்பாலான இந்திய பொருட்கள் செல்கின்றன. Sun Pharmaceutical Industries, Tata Consultancy Services, Wipro, Tech Mahindra, State Bank of India, Larsen & Toubro, Infosys நிறுவனங்கள் இஸரேலிலும் கிளைகளை கொண்டுள்ளன