பதஞ்சலி “ருச்சி சோயா” வின் IPO !
புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் இணை நிறுவனரான பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செபி ஒப்புதல் பெற்று ஐபிஓ நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது. ஐபிஓவின் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக இருக்கும். இந்த செயல்பாட்டு மூலதனம், தேவைகள் மற்றும் நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
பதஞ்சலி குழுமத்தின் ஒரு அங்கமான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், இந்திய சமையல் எண்ணெய் துறையில் முன்னணி எஃப்எம்சிஜி பிராண்டுகளில் ஒன்றாகும். சோயா உணவு உற்பத்தியாளர்களில் இந்நிறுவனம் மிகப் பெரிய பங்கினை கொண்டுள்ளது. அத்துடன் நிகர வருமானம், நிறுவனத்தின் கடன்களை திருப்பிச் செலுத்துதல் அல்லது முன்கூட்டியே செலுத்துதல் போன்றவற்றின் ஒரு பகுதியாகவும் இந்த ஐபிஓ திரட்டல் இருக்கும்.
எஸ்பிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட், ஆக்ஸிஸ் கேப்பிட்டல் லிமிடெட், ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பங்கு வெளியீட்டினை நிர்வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.