அலைபோல் எழுந்த பேடிஎம் நிறுவன பங்குகள்!!!
ஒரு காலத்தில் கிரிக்கெட் தொடர்களையே நடத்தும் அளவுக்கு வசதிபடைத்த நிறுவனமாக இருந்த பேடிஎம் சரிவை சந்தித்து தற்போது மீண்டும் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் பேடிஎம்மின் தாய் நிறுவனமான one 97communications நிறுவனத்தின் பங்குகள் தற்போது 20% ஏற்றம் கண்டுள்ளன. 2025-ம் ஆண்டுக்குள் பேடிஎம் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபகரமான நிறுவனமாக மாறும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதை அடுத்து இந்த ஏற்றத்தை பேடிஎம் நிறுவனம் பெற்றுள்ளது
அக்டோபர் -டிசம்பர் காலாண்டில் அந்த நிறுவன இழப்பு 392.1கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டு இருந்த 571 கோடி ரூபாயை விட குறைவாகும். குறிப்பிட்ட அந்த நிறுவன லாபத்தை புளூம்பர்க் கணித்துள்ளது. அதாவது அந்நிறுவன லாபம் 8% வரை உயர்ந்திருக்கக்கூடும்,நிறுவன இழப்பு 38% சரிவை சந்தித்துள்ளது. மாதாந்திர அடிப்படையில் பேடிஎம் நிறுவனத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நிறுவனம் லாபத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 12 நிதி ஆலோசகர்களில் 8 பேர் இந்த நிறுவன பங்குகளை மக்கள் வாங்கலாம் என்று நம்பிக்கை அளித்ததை அடுத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத உச்சமாக பேடிஎம் நிறுவனம் ஏற்றம் கண்டுள்ளது.