விற்கப்பட்ட பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ளும் பேடிஎம் நிறுவனம்!!!
ஒரு காலத்தில் கிரிக்கெட் போட்டிகளையே ஸ்பான்சர் செய்யும் அளவுக்கு செல்வ செழிப்பாக இருந்த நிறுவனம் பேடிஎம்மின் தாய் நிறுவனமான one 97 communicationsநிறுவனம் இந்த நிறுவனம் கடன் பெற்று ,வணிகத்தை வளர்க்க முயன்று கடனாளி ஆனதே மிச்சமாகி உள்ளது. பங்குச்சந்தைகளில் அதிக மதிப்பீடு போட்டு பங்குகளை விற்ற இந்நிறுவனத்துக்கு கடன் அளித்தவர்கள் நெருக்கி செய்வதால் தற்போது வேறு வழியில்லாமல் பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ள பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சுமார் 850 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அந்நிறுவனம் பங்குச்சந்தைகளில் பங்குதாரர்களிடம் இருந்து வாங்குகிறது. ஒரு பங்கின் விலை 810 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையை பே டிஎம் நிறுவனம் செய்ய இருக்கிறது 1 கோடியே 49 லட்சத்து 3 ஆயிரத்து 827 பங்குகளை பேடிஎம் நிறுவனம் மீண்டும் வாங்கிக்கொள்ள இருக்கிறது, இதன் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்டவற்றை சேர்த்து அந்த நிறுவனத்துக்கு ஆயிரத்து48 கோடிரூபாய் செலவுபிடிக்க இருக்கிறது. இந்த தருணத்தில் பங்குகளை மீண்டும் பேடிஎம் நிறுவனத்திற்கே விற்பது பங்குதாரர்களுக்கு நல்ல பலன்தரும் என்று அதன் சிஇஓ தெரிவித்துள்ளார். கடந்தாண்டில் கடுமையாக வீழ்ந்த பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் கடந்த செப்டம்பரில் 76% உயர்ந்துள்ளது. வருவாய் எவ்வளவு அதிகரித்ததோ அதே அளவு இழைப்பையும் அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.