அதிர்ச்சியூட்டும் பேடிஎம் IPO சரிவு ! முதலீட்டாளர்களுக்கு என்ன சொல்கிறது?
பேடிஎம் பங்குகளின் அதிர்ச்சியூட்டும் இரண்டு நாள் சரிவானது, ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) விஷயத்தில் நாட்டின் வெற்றிகரமான பொருளாதார ஆண்டாக இருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி உள்ளது. பேடிஎம் இன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவு வாங்கிய சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு மதிப்புகள் இரண்டு வர்த்தக அமர்வுகளில் 35% க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன் இறுதி விலையான 1,359.60 ரூபாவிலிருந்து சந்தை மதிப்பீட்டாளர்கள் கணித்திருக்கும் 1,200 ரூபாயாக பங்கு சரிந்தால் மேலும் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படலாம். “பேடிஎம் நிகழ்வு மக்களை எச்சரிக்கையாக இருக்க வைக்கும், கண்மூடித்தனமாக பங்குச் சந்தையை அணுகுவதில் இருந்து இந்த சரிவு அவர்களைத் தடுக்கும், சந்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்கிறார் முதலீட்டு நிபுணர் ஒருவர்.
இந்தியாவின் பங்குச் சந்தைகள் இந்த ஆண்டு உற்சாக நிலையில் உள்ளன, வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கியால் சந்தை உற்சாகமடைந்தது, லட்சக்கணக்கான புதிய சில்லறை முதலீட்டாளர்கள் அபாயகரமான பங்குகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கின்றனர். தொடர்ந்து வெற்றியடைந்த ஐ.பி.ஓ க்களின் நடுவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம் பங்குகளின் வீழ்ச்சியானது சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு படிப்பினையாக உள்ளது.