ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்த பேடிஎம்…
பட்டி தொட்டியெல்லாம் பரவி இருக்கும் பேடி எம் நிறுவனம் தனது பணியாளர்கள் ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது. சிக்கன நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் நடந்திருக்கிறது. பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக உள்ள ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இதன் பணிகளை செய்திருக்கிறது.
மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் ஆயிரம் என்பது 10விழுக்காடு அளவாகும். கடும் நிதி நெருக்கடியில் உள்ள பேடிஎம் போலவே புதிய பொருளாதார நிறுவனங்கள் இந்தாண்டின் முதல் 3 காலாண்டில் 28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதாவது 2021-ல் 4080 பேரும், 2022-ல் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பேடிஎம் போஸ்ட்பெயிட் பிரிவு தற்போது சொத்து நிர்வகிப்பது மற்றும் காப்பீடு தரகு பணிகளை செய்து வருகிறது. பணியாளர்களை நீக்கியதன் மூலம் நிறுவனத்துக்கு 10 முதல் 15 விழுக்காடு செலவு மிச்சமாவதாகவும், செயற்கை நுண்ணறிவு அதற்கு பதில் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு பக்கம் ஆட்குறைப்பு செய்துள்ள பேடிஎம், அடுத்ததாக பேடிஎம் மனி என்ற பிரிவை வலுப்படுத்துகிறது. அதில் புதிய திறமைசாலிகளை அந்நிறுவனம் களமிறக்குகிறது.
இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் போதுமான அளவுக்குவேலை செய்யவில்லை என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டவர்கள் என்கிறது அந்நிறுவனம் அண்மையில் பேடிஎம் நிறுவனம் பாவேஷ் குப்தா என்பவரை தனது புதிய தலைவராக நியமித்துள்ளது. கிரோ, ஜீரோதா,ஏஞ்சல் ஒன் போன்ற தரகு நிறுவனங்களைப்போல பேடிஎம் மணி செயலியை மாற்ற முயற்சிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது.