தரமற்ற பிரஷர் குக்கர்கள் விற்பனை.. – Paytm, Snapdeal நிறுவனங்களுக்கு அபராதம்..!!
இ-காமர்ஸ் நிறுவனங்களான Paytm, Snapdeal ஆகியவற்றுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
இந்த இரண்டு மின் வணிக நிறுவனங்களும், தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், Paytm, Snapdeal ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைனில் தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக CCPA 15 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மின்சார அமிர்ஷன் வாட்டர் ஹீட்டர், தையல் இயந்திரம், சமையல் காஸ் சிலிண்டர், ஹெல்மெட் மற்றும் பிரஷர் குக்கர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, செல்லுபடியாகும் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாமல் வாங்குவதற்கு எதிராக நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அறிவிப்பையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசால். பிரிவு 17-இன் விதிகளை மீறும் எந்தவொரு நபருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சகம் கூறியது.
இந்திய தர நிர்ணய பணியகம் , ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத 1,032 பிரஷர் குக்கர் மற்றும் 936 ஹெல்மெட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறியதாகவும் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தெரிவித்திருந்தது. ஹெல்மெட்கள் மற்றும் பிரஷர் குக்கர்களில் QCO ஐ மீறியதற்காக BIS தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
ஏற்கனவே, சீனாவுடனான தொடர்பு பற்றி புகார் எழுந்ததால், Paytm Payments நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க செபி தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில். தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு பேடிஎம் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.