புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது.. Paytm-க்கு RBI ஆப்பு..!!
Paytm Payment வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இணையவழி நிதி பரிவர்த்தனை செய்து வரும் Paytm Payment வங்கி வரும் ஜுன் மாதத்தில், சிறிய நிதி வங்கியை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டவிதி 35-ஏ பிரிவின் கீழ் விதிக்கப்பட்டுள்ள இந்த தடை உடனே நடைமுறைக்கு வருவதாகவும், பேடிஎம் பேமெண்ட் வங்கியின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து புகார்கள் எழுந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகுதியுடைய தகவல் தொழில் நுட்ப தணிக்கை குழுவை அமைத்து Paytm Payment வங்கியின் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளை தணிக்கை செய்யும்படியும் ஆர்பிஐ உத்தரவில் வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப தணிக்கை நிறுவனம் தரும் அறிக்கையின் அடிப்படையில் புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பது தொடர்பாக அனுமதி அளித்து குறித்த பரிசீலனை செய்யப்படும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.