Paytm-ன் வருவாய் 89% உயர்வு..!!
2022-23-ம் ஃபின்டெக் நிறுவனமான Paytm-ன் வருவாய், டிசம்பர் காலாண்டில் (Q3) 89 சதவீதம் அதிகரித்து ரூ.1,456 கோடியாக இருந்தது. அதேசமயம் நிகர இழப்பு 45 சதவீதம் அதிகரித்து ரூ.778 கோடியாக உள்ளது.
Paytm நிறுவனம் தனது பங்களிப்பு லாபம் FY21 இன் Q3 இல் 8.9 சதவீதத்திலிருந்து FY22 இன் Q3 இல் 31.2 சதவீதமாக வருவாயில் முன்னேற்றம் கண்டுள்ளது.
Paytm நிறுவனம் தகவல்:
எங்கள் வாடிக்கையாளர் மற்றும் வணிகர் தளத்தை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துகிறோம். எங்கள் தளத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இப்போது 350 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, மேலும் எங்கள் வணிகத் தளம் ஒரு வருடத்திற்கு முன்பு 20 மில்லியனில் இருந்து 24.9 மில்லியனாக விரிவடைந்துள்ளதுள்ளதாக Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது.
சராசரி மாதாந்திர பரிவர்த்தனை பயனர்கள் குறைந்தபட்சம் ஒரு வெற்றிகரமான பேமெண்ட் பரிவர்த்தனை கொண்ட தனிப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை Q3 இல் 37% Y-o-Y ஆக 64.4 மில்லியனாக அதிகரித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியன்று பிஎஸ்இயில் Paytm பங்குகள் ரூ.953.25-ல் முடிவடைந்தது. அதன் வெளியீட்டு விலையான ரூ.2,150-ல் இருந்து 56 சதவீதம் குறைந்து, அதன் பட்டியலிடப்பட்ட விலையான ரூ.1,950ஐ விட 51 சதவீதம் குறைவாக இருந்தது. நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப் பங்களிப்பில் கிட்டத்தட்ட $21 பில்லியன் மதிப்பிலானது, தற்போது அதன் சந்தை மூலதனம் $8.28 பில்லியனாக உள்ளது.