விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..
இந்திய பங்குச்சந்தைகள் ஜூலை 18ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 205 புள்ளிகள் உயர்ந்து 66 ஆயிரத்து 795 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்துக்கொண்டன. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37புள்ளிகள் அதிகரித்து 19ஆயிரத்து 749 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. மொத்தம் 1,384 துறை பங்குகள் ஏற்றம் கண்டன.1958 நிறுவன பங்குகள் சரிவை கண்டன. 118 நிறுவன பங்குகள் பெரிய மாற்றண் இன்றி அப்படியே வணிகத்தை மேற்கொண்டன. இன்போசிஸ் நிறுவனம் 4 விழுக்காடு ஏற்றம் கண்டன. இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியிடப்படுகின்றன. பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் இரண்டரை விழுக்காடு சரிவை கண்டன ltimind treeநிறுவன பங்குகள் 3 விழுக்காடு வரை சரிந்தன. குஜராத் புளோரோ குளோபல்ஸ் நிறுவன பங்குகள் 3 விழுக்காடு உயர்ந்துள்ளது. RPP இன்பிரா நிறுவன பங்குகள் 8 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. ஷீலா போம் நிறுவனம் 15விழுக்காடு ஏற்றம் கண்டது. ஹாத்வே நிறுவனத்தின் பங்குகள் 5 விழுக்காடு குறைந்தது. பங்குச்சந்தைகளில் தொடர்ந்து சீரான முன்னேற்றம் காணப்படுவதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தைகளில் சில துறைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், தங்கம் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்தது. 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 112 ரூபாய் அதிகரித்து 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 81 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 100ரூபாய் குறைந்து 81ஆயிரத்து 400 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி அனைத்து கடைகளிலும் பொதுவாக இருக்கும். ஆனால் செய்கூலி, சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதால் அதனை குறைவான கடைகளில் தேடிப்பிடித்து வாங்குவது மிகச்சிறந்ததாகும்.