பைலட்கள் சென்ட் போட தடை…ஏன்?
இந்தியாவில் உள்ள விமானிகள் வெளிநாடுகளுக்கு பறக்க முற்பட்டால் அவர்களுக்கு புதிய விதி அமலாகியுள்ளது. அதாவது விமானிகள் தங்களுக்கு விருப்பமான பர்பியூமை இனி அடித்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானிகள் மது அருந்தாமலேயே அவர்களின் மீது ஆல்கஹால் அருந்தியதாக போலியான முடிவுகள் வருவதை தடுக்கவே இந்த புதிய விதியாம். விமானி மட்டுமின்றி, விமானக்குழுவில் உள்ள எவரும், ஆல்கஹால் கலந்த பொருட்களான,மருந்துகள், மவுத்வாஷ்,பல்களை சுத்தப்படுத்தும் ஜெல், பெர்ஃபியூம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இயலாது. பெர்ஃபியூமில் 60 முதல் 95 விழுக்காடு வரை எதில் ஆல்கஹால் வேதிப்பொருள் இருக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் அனைத்து குழுவினரும் மது அருந்தினார்களா என்ற பரிசோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 41 இந்திய விமானிகள்,116 பணியாளர்கள் மது பயன்படுத்தியதாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிக்கு 12 மணி நேரத்துக்கு முன்பு மது அதிகளவில் குடித்திருந்தாலும் இந்த புதிய விதி பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.அண்மையில் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் பணிக்கு ஒரு இரவு முன்பு 2 கிளாஸ் ஒயின் குடித்ததால் அவருக்கு 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.