எப்பதான் பாஸ் எங்கள கம்பெனிக்கு வரச்சொல்வீங்க!!!
இந்தியாவில் பிரபல தொழிலாளர் அமைப்புகளில் முக்கியமானதாக NITEs என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஏராளமான பணியாளர்களை வேலைக்கு என்று எடுத்துவிட்டு, அவர்களுக்கு பணி தராமலும் இன்னும் சம்பளம் தராமலும் காக்க வைத்துள்ளதாக சாடியுள்ளது. வேலைக்கு ஆட்கள் தேவை என்று கல்லூரிகளுக்கு சென்று ஆட்களை தேர்வு செய்துள்ள நிறுவனங்கள் , சுமார் ஆயிரம் பேரை வேலைக்கு சேர்த்துக்கொள்ளாமல் ஓராண்டுக்கும் மேலாக காக்க வைத்துள்ளதாக NITES அமைப்பு தெரிவித்துள்ளது. காத்திருப்போரில் 51% பேர் பல மாதங்களாக அவதிப்படுவதாக NITEs தெரிவித்துள்ளது. மாதக்கணக்கில் காத்திருக்கும் பணியாளர்களுக்கு பண ரீதியாகவும், மன ரீதியாகவும் உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கிடப்பில் வைத்துள்ள தங்கள் பணியாளர்களுக்கு விரைந்து புதிதாகவேலை தரவேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசும், மத்திய அரசு அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள NITES அமைப்பு,நிறுவனங்களை முறைப்படுத்தவும், பணிக்கு எடுக்கப்பட்டவர்களுக்கு காலதாமதம் இன்றி உடனடியாக வேலை அளிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.