புருடா விட்றத நிறுத்துங்க பிளீஸ்…
மியூச்சுவல் பண்ட்ஸ் எனப்படும் பரஸ்பர நிதியில் பணத்தை போட்டால் இவ்வளவாகும்,அவ்வளவு ஆகும் என்று பந்தா செய்வதை முதலில் நிறுத்துங்கள் என்று பரஸ்பர நிதி திரட்டும் நிறுவனங்கள் செபி கேட்டுக்கொண்டுள்ளது உண்மைக்கு புறம்பான தகவல்களை விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டாம் என்றும் செபி கேட்டுள்ளது. 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பங்குச்சந்தை ஒழுங்குமுறை விதிப்படி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரஸ்பர நிதியில் தரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் முதலீடு செய்தால் எவ்வளவு திரும்ப கிடைக்கும் என்றும் தெளிவாக மக்களுக்கு புரிய வைக்காமல் பணம் வசூலிப்பதிலும் கட்டுப்பாடுகளை செபி கெடுபிடிகளை கொண்டு வருகிறது. விளம்பரப்படுத்தும் முன் செபியிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ள அந்த அமைப்பு,போலியான தகவல் இணையதளம்,விளம்பரங்கள், அச்சிடப்பட்ட நோட்டீஸ்களில் இருந்தால் அதனை நீக்க வேண்டும் என்றும் செபி எச்சரித்துள்ளது. பரஸ்பர நிதி நல்ல சேமிப்பு முறை என்று பலரும் தெரிவித்து வரும் சூழலில் அதனை வைத்து ஏமாற்று வேலைகள் நடப்பதை தடுக்கும் நோக்கில் செபி கொண்டுவந்துள்ள திட்டம் முதலீட்டாளர்களுக்கு மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.