அதானி வழக்கு ஒத்திவைப்பு
அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் கடந்த ஜனவரி 24ம் தேதி அதிரடி புகார்களை தெரிவித்திருந்தது. இதில் அதானி குழும சாம்ராஜ்ஜியமே சரிந்தது. இந்த நிலையில் அது தொடர்பான புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதானி குழும வழக்கு மே 12ம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி விசாரிக்க செபிக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது ஆனால் செபியோ 6 மாதங்கள் அவகாசம் கோரியுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவகாசம் கோரி செபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகார்கள் தெரிவிக்கும்முன்பு எச்சரிக்கை தேவை என்றும் மனுதாரரை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் ஆதாரமற்ற புகார்களை கூறுவது பங்குச்சந்தையில் முதிலீட்டாளர்கள் வரை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மார்ச் 2-ம் தேதி இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அம்சங்களை அறிவுறுத்தி செபிக்கு 2 மாத அவகாசம் அளித்திருந்தது. ஆனால் புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு செபிக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில் இதனை 3 மாதங்களாக அளிக்க நீதிமன்றம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.பல்வேறு புகார்களை கூறியுள்ள ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி , பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அந்த விவகாரத்தில் பிரதமர் தரப்பில் இருந்து இதுவரை உறுதியான ஒரு பதில் இல்லை என்று கூறப்படுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த சில வாரங்களில் அதானி குழும பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.