விலை ஏறிடுச்சு ப்பா!!!!
கடந்தாண்டில் மட்டும் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக ஐநாவின் உணவுப்பிரிவு அமைப்பு தெரிவித்துள்ளது. FAO என்ற ஐநாவின் பிரிவு உலகளவில் நிலவும் உணவுப் பொருட்களின் விலையை கண்காணித்து சீரான இடைவெளியில் அது குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன் தரவுகளின்படி கடந்த டிசம்பர் மாதம் மட்டும் உலகளவில் உணவுப்பொருட்களின் விலை குறைந்தாலும் ஒட்டுமொத்தமாக 14% விலை ஏற்றம் கண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் நவம்பர் மாதம் 135.7 என்ற அளவில் இருந்த விலைவாசி உயர்வு, டிசம்பரில் சற்று குறைந்து 132.4 ஆக சரிந்தது. ஒட்டுமொத்தமாக 2021-ம் ஆண்டு இருந்ததைவிடவும் 14.3% அதிகம் என்கிறது அந்த புள்ளி விவரம். இந்த அளவு என்பது கடந்த 1990ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்சம் என்கிறது FAO அமைப்பு. இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணியாக உள்ளது ரஷ்யா-உக்ரைன் போர் என்றும், கருங்கடல் பகுதியில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதே உணவுப்பொருட்கள் கடந்தாண்டு கடுமையாக உயர காரணம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காய்கனிகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்களின் விலை சற்று சரிந்தாலும், சர்க்கரை மற்றும் பால் பொருட்கள் விலை பல நாடுகளிலும் அதிகரித்துள்ளது என்கிறது அந்த அறிக்கை.