பழைய உலோக பொருட்களால் விலை குறையும்:சொல்கிறார் கட்கரி
மறுசுழற்சி செய்யப்படும் உலோகப் பொருட்களால் ஆட்டோமொபைல் உற்பத்தி செலவு 30% வரை குறையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இப்படி செய்வதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பேசிய நிதின் கட்கரி ஆட்டோமொபைல் துறையில் 15 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த துறையில் மட்டும் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ள அவர்,கடந்தாண்டே ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது பெரிய கார் உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளதாக கட்கரி தெரிவித்தார். இந்தியாவில் செம்பு, ஈயம் மற்றும் ஸ்டீல் பற்றாக்குறை ஏற்படும் சூழல் குறித்து பேசிய அமைச்சர், பழைய வாகனங்கள் பழைய உலோகப் பொருட்களை மறுசுழற்சி செய்யும் போது, ஆட்டோமொபைல் உற்பத்தி 30% விலை குறையும் என்றார். அடுத்த நிதியாண்டில் 9 லட்சம் வாகனங்கள் உடைத்து புதிய பொருட்களாக மாற்றப்படும் என்றும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி பங்களிப்பில் ஆட்டோமொபைல் துறைமுக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ள கட்கரி,சுழற்சி முறையிலான பொருளாதாரம் அதிக வேலைவாய்ப்புகளை தரும் என்று கூறியுள்ள அமைச்சர், வாகன மறுசுழற்சி என்பது நாட்டின் வளம் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.