இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்குத் தடை வருமா? அங்கீகாரம் கிடைக்குமா? திங்களன்று உயர் மட்டக் கூட்டம் !
கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை கிரிப்டோகரன்சி குறித்த தொடர் விவாதங்களை நடத்தி வருகின்றன. கிரிப்டோகரன்சி இந்தியாவில் பெரிய அளவில் முதலீட்டு வழிமுறையாக விரைவாக வளர்ந்து வருகிறது.
வருமானத்தை அதிகப்படுத்த விளம்பரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நாட்டில் வலுவாக உணரப்பட்டது என்று இந்த அரசின் கூட்டங்கள் பற்றி அறிந்தவர்கள் தெரிவித்தனர். கட்டுப்பாடற்ற கிரிப்டோகரன்சி சந்தைகள் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்புக்கான வழிகளாக மாறிவிடக் கூடாது என்று விவாதங்களை மேற்கோள் காட்டி அவர்கள் கூறினர்.
இதுகுறித்த உயர் மட்ட ஆய்வு திங்களன்று, கிரிப்டோகரன்சி தொடர்பான தொழில் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்களுடன் பாராளுமன்ற பட்ஜெட் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக வருகிறது. இது வேகமாக வளர்ந்து வரும் துறை என்பதை மனதில் கொண்டு, அரசு உன்னிப்பாக கவனித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூட்டத்தின் விவரங்களை அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் முற்போக்கானதாகவும் முன்னோக்கியும் இருக்கும் என்றும், நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் தொடர்ந்து முனைப்புடன் ஆய்வுகளில் ஈடுபடும் என்றும் தெரிய வருகிறது. இது உலகளாவிய கூட்டுமுயற்சி மற்றும் உத்திகள் தேவைப்படும் துறையாகும், கிரிப்டோ கரன்சியை வைத்துப் பரிவர்த்தனை செய்யும் நாள் வர்த்தக எண்ணிக்கையானது கடந்த மாதங்களில் 200 % முதல் 500% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.