உள்நாட்டு உற்பத்தி தளவாடங்களுக்கே முன்னுரிமை..!!!
இந்தியாவில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெருந்தொகையில் 75% உள்நாட்டு தளவாடங்களின் உற்பத்திக்கு செலவு செய்யப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1 லட்சம் கோடி ரூபாயில் ராணுவ ஆயுதங்கள் இந்திய உற்பத்தியாளர்களிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள்,துப்பாக்கிகள் வாங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். ஏரோ இந்தியா கண்காட்சியில் பேசிய ராஜ்நாத்சிங் உள்நாட்டு தளவாடங்கள் பற்றி பேசியுள்ளார். பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தவே இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகளாவிய பாதுகாப்புத்துறையினருடன் போட்டி போடும் அளவுக்கு இந்திய பாதுகாப்புத்துறையில் உற்பத்திகள் தீவிரப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வந்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. இந்திய விமானப்படையில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகவும் ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியுள்ளார்.