ஹைட்ரஜன்,மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை?
மின்சார வாகனங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய இரண்டு துறைகள்தான் அரசின் முக்கியத்துவங்களில் முதன்மையானவை என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் உயர் அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றல்துறை அமைச்சகத்தில் இருந்து அளிக்கப்பட்ட கடிதங்கள் ரிசர்வ் வங்கியின் ஆலோசனையில் விவாதிக்கப்படுகிறது. கடன்கள் வழங்குவதற்காக அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் இந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் கடன்கள் அளிக்க தரப்படும் முன்னுரிமையில் இந்த துறைகளுக்கு 40%அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்று கூறப்படுகிறது. விவசாயம், சிறு குறு நிறுவனங்கள், ஏற்றுமதி கடன், கல்வி,,வீடுகள், புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உள்ளிட்ட துறைகள் ஏற்கனவே முன்னுரிமை துறைகளாக இருக்கின்றன. இவற்றுடன் தற்போது மின்சார வாகனங்களும், பசுமை ஹைட்ரஜனும் சேர்க்கப்பட இருக்கிறது. வணிக வங்கிகள்,சிறு நிதி வங்கிகள் , கூட்டுறவு வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கும் இந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய துறையினர் மேம்பட வேண்டும் என்பதற்காக இந்த துறைகள் 1972 களில் வகுக்கப்பட்டது. இந்த துறைகளில் உள்ள குறைகளை கேட்கவும் கண்காணிக்கவும் தனிப்பிரிவுகளும் உள்ளன. இந்த துறைகளுக்கு குறைந்தபட்ச கடன்களையாவது அளிக்க வேண்டும் என்றும் வங்கி விதிகளில் உள்ளன.