தனியார் மயம்தான் முன்னேற்றமாம், சொல்வது யார் தெரியுமா??
ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவராக உள்ளவர் சஜ்ஜன் ஜிண்டால். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய ஜிண்டால், இந்தியாவை வழிநடத்துவதில் பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிட்டதாகவும் தனியார் துறை பங்குகளே சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார். தனியார் துறை பங்களிப்பு தான் லாபத்தை பதிவு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் 10 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதாகவும் கூறியுள்ள அவர், நவீன சிந்தனையை இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பொதுத்துறைதான் வளர்ச்சியை தரும் என்று சமூக சோசலிச கொள்கைகள் பயன்தராது என்றும், அவர் பேசியுள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பொதுத்துறை தோல்வியடைந்துவிட்டது என்றார். மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்து வைத்துள்ள ஜிண்டாலின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.