ஓபெக் பிளஸ் நாடுகளுக்கு சிக்கல்..
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஓபெக் நாடுகளாகும். இந்த நாடுகள் ஒன்று சேர்ந்து முடிவு செய்துதான்,எவ்வளவு கச்சா எண்ணெயை மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கலாம், எவ்வளவு விலை நிர்ணயிக்கலாம் என்பதை முடிவு செய்வார்கள்..இந்த குழுவில் இடம்படித்துள்ள 8 உறுப்பினர்கள் ஒரு நாளில் 22லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்துள்ளனர். ஆனால் அது நீண்டகாலத்துக்கு அல்ல., வரும் அக்டோபர் 2024 ஆம் ஆண்டு வரை மட்டுமே.
ஓபெக் அமைப்பில் இல்லாத சில நாடுகள் ஏற்கனவே உற்பத்தியை அதிகரித்துள்ளன. சர்வதேச அளவில் ஆற்றல் முகமை தகவலின்படி உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவை உச்சத்தை தொடும் என்று குறப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின்ஷேல் மற்றும் கயானாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருகிறது. 78 அமெரிக்க டாலர்களாக தற்போது கச்சா எண்ணெய் விலை உள்ளது. இதில் லாபம் எல்லாம் போக 50 முதல் 60 அமெரிக்க டாலர்கள் வரை உற்பத்தி செலவாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஓபெக் நாடுகளுக்கும் அமெரிக்க ஷேல் உற்பத்தியாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கயானா மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 30 டாலர்கள் என்ற அளவில் கிடைக்கும்பட்சத்தில் ஓபெக் நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது.