சொத்துகளின் விலை 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி..
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை ஒரு காலகட்டத்தில் அசுர வள்ர்ச்சி பெற்றிருந்தது. பின்னர் அதில் தொய்வு காணப்பட்டது. இந்நிலையில் மக்கள் குடியிருக்கும் வீடுகளின் மதிப்பு,இந்தியாவில் 6 முக்கிய நகரங்களில் 10 முதல் 15விழுக்காடு இந்தாண்டு உயர்ந்திருக்கிறதாம் தெரியுமா. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி என்கிறார்கள் நிபுணர்கள். முதலீடு செய்வதில் ஆர்வம்,அதிக வாடகைவருவாய் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில்தான் வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறதாம். 2 படுக்கை அறைகள் கொண்ட வீடுகளுக்கு தேவை 15 விழுக்காடு அதிகரித்து உள்ளதாம். பெங்களூருவில் இந்த உயர்வு விகிதம் 13%ஆக இருக்கிறதாம். மும்பையில் 10%உயர்வு இருக்கிறது. டெல்லியில் 12 %, புனேவில் 11% இந்த உயர்வு இருப்பதாக நோ புரோக்கர் நிறுவனம் தெரிவிக்கிறது. அதிகரிக்கும் வாடகை, வீட்டுக்கடன்களின் ஈஎம்ஐக்கு நிகராக வந்துவிடுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். 25 முதல் 45 வயதில் உள்ளவர்கள்தான் அதிகம் வீடுவாங்க ஆர்வம் காட்டி வருகின்றனராம்.
ஐடிதுறை சார்ந்த இளைஞர்கள்தான் பெங்களூரு, சென்னை, மும்பை, புனே, டெல்லியில் வீடுவாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். 30விழுக்காடு வரை வாடகை உயர்வு என்பது இந்த துறையில் மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது. இதுவே பலரையும் வீடு வாங்க தூண்டுகிறதாம். இதில் பலர் முதல்முறை வீடுவாங்குபவர்கள்தான்.
இந்தியாவின் 7 நகரங்களில் வீடுகள் விற்பனை சூடுபிடித்திருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.மொத்தம் 75ஆயிரம் புதிய அபார்ட்மென்ட்கள் முதல் 3 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டைவிட 25%அதிகமாகும். 2008 காலகட்டத்துக்கு பிறகு 3ஆவது காலாண்டில் கணிசமான வீடுகள் விற்கப்பட்டுள்ளன. 2008ஆம் ஆண்டில் 3 ஆவது காலாண்டில் விற்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 69,000. ஆனால் தற்போதே 65 ஆயிரம் வீடுகள் விற்கப்பட்டுள்ளன.இன்னும் சில காலத்துக்கு இந்த சீரான வளர்ச்சி ரியல் எஸ்டேட்துறையில் இருக்கும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.