பிரிட்டனில் டாடா ஆலைக்கு எதிரான போராட்டம் வாபஸ்..
பிரிட்டனில் டல்பாட் பகுதியில் உள்ள டாடா உருக்கு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில் திங்கட்கிழமை அந்த போராட்டம் கைவிடப்பட்டது. அடுத்தகட்ட பணிகள் குறித்து வரும் 8 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் அந்த நாட்டு பணியாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தொழிலாளர்கள் யூனியனின் இந்த முடிவுக்கு டாடா நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. வருங்கால முதலீடுகள் மற்றும் வணிகத்தை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் டாடா ஸ்டீல் நிறுவனம் கூறியுள்ளது. எரிவாயுவில் இயங்கும் ஆலையை மூட அந்நாட்டு தொழில்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கிரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்கும் வகையில் 1.25 பில்லியன் பவுண்டு செலவில் புதிய ஆலை அமைக்க அரசு உதவும் நிலையில் தொழிலாளர்கள் போராட்டம் சிக்கலை ஏற்படுத்துவதாக டாடா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டனின் பொதுத்தேர்தலிலும் இந்த விவகாரம் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான தொழிலாளற் கட்சியில் இருந்தும் புதிய திட்டத்துக்கு முதலீடு கிடைக்கும் என்றும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.