கடனை திரும்ப வாங்க பொதுத்துறை வங்கிகள் முயற்சி!!!!
வாராக்கடன்கள் வங்கிகளுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் இருந்து வரவேண்டிய வாராக்கடனை வேகமாக வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வாராக்கடன்களை மீட்க தனி முகாம்களை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டில் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் பணத்தையாவது வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் இதுவரை 8லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயை வாராக்கடன்களாக அறிவித்துள்ளன. கடந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும்90 ஆயிரத்து958 கோடி நிதியை வங்கிகள் வசூலிக்கவில்லை என்கிறது புள்ளி விவரம். வாராக்கடன்களை அழுத்தம் தந்து பெற வேண்டிய நிர்பந்தத்துக்கு பொதுத்துறை வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. கடன்பெற்று, உரிய வசதி இருந்தும் கட்டமுடியாத நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022 டிசம்பர் வரை வணிக வங்கிகள் 6.59 லட்சம் கோடி மதிப்புள்ள வாராக்கடன்களின் சில பகுதிகள் வரவு வைக்கப்பட்டதாகவும்,இதில் 1.32 லட்சம் கோடி கடந்த 5 ஆண்டுகளாக இழுவையில் கிடந்த பணம் என்றும் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டிருந்தது.